நீங்கள் செய்வதைப் பற்றி தொடர்ந்து விமர்சனங்களைத் தேடுங்கள். சொல்லப்பட்ட விமர்சனம் தங்கத்தைப் போல மதிப்புமிக்கது.
*எங்கே விழுந்தோம் என்பதைவிட எங்கே நம் கவனத்தை சிதற விட்டோம் என்பதை கவனித்து பாருங்கள்... அடுத்தமுறை விழவே மாட்டீர்கள்...!*
சூழ்நிலைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைகளை மாற்றியமையுங்கள்.
- ஜாக்கி சான்.
நேற்று நடந்ததை கடந்து செல்லுங்கள். இன்று நடந்ததை கற்றுக் கொள்ளுங்கள். நாளை நடப்பதை எதிர் கொள்ளுங்கள்.
உங்களது எளிமையான நடத்தைக்காகவும், உண்மையை விடாமல் கடைப்பிடிக்கும் குணத்திற்காவும் ஒருபோதும் வெட்கப்படாதீர்கள்.
வீண் ஆடம்பரத்தையும் பொய்யையும் நம்பும் இந்த நவீன உலகில், குறைந்து வரும் இந்த அரிய குணங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். என்றும் மகிழ்ச்சி உறுதி.
- (ப/பி)
🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽
Historical Events on June 1.
● World Milk Day
● 1831, 1st June: James Clark Ross became the first European at the North Magnetic Pole.
● 1874, 1st June: East India Company was finally dissolved.
● 1945, 1st June: Establishment of the Tata Institute of Fundamental Research.
● 1955, 1st June: India’s Untouchability (Offence) Act was implemented.
● 1980, 1st June: Cable News Network (CNN) was launched.
● 1984, 1st June: Operation Blue Star to remove Jarnail Singh Bhindranwale and his followers began with CRPF and BSF firing at the Guru Ram Das Langar building in the vicinity of Golden Temple.
● 1996, 1st June: H. D. Deve Gowda became the 11th Prime Minister of India.
● 2001, 1st June: The infamous Nepalese royal massacre happened inside Narayanhity Royal Palace. This tragic incident left nine members of the royal family dead including King Birendra and Queen Aishwarya.
● 2004, 1st June: Ramesh Chandra Lahoti took over as the 35th Chief Justice of India.
Famous Birthdays & Birth Anniversaries on June 1.
● 1842: Satyendranath Tagore, the first Indian to join the Indian Civil Service and author.
● 1926: Marilyn Monroe, an American actress, model, and singer.
● 1929: Nargis Dutt, an Indian film actress.
● 1937: Morgan Freeman, an American actor, director, and narrator.
● 1970: R. Madhavan, an Indian actor, writer, and film producer.
● 1985: Dinesh Karthik, an Indian cricketer.
Death Anniversaries of famous people on June 1.
● 1868: James Buchanan Jr., the 15th president of the United States.
● 1944: Mahadev Vishwanath Dhurandhar, an Indian painter.
● 1968: Helen Keller, an American author, political activist, and lecturer. She was the first deaf-blind person to earn a Bachelor of Arts degree.
● 1987: K. A. Abbas, an Indian film director, screenwriter, novelist, and journalist.
● 1996: Neelam Sanjiva Reddy, the sixth President of India.
● 2002: Hansie Cronje, a South African international cricketer.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
**********************************
*தினம் ஒரு கதை 📖*
**********************************
*நீதி கதைகள்*
*ராஜா கொடுத்த ஆடை*
அரண்மனையை ஒட்டி பிச்சைக்காரன் ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள் அந்த அரண்மனைக் கதவில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அரச உடை அணிந்து எப்படி விருந்திற்கு செல்வது என்று யோசித்தான். அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணியவனின் மனதில் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், ராஜாவைப் பார்க்க வேண்டும் என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே? என்றார் அரசர். ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன் என்று பணிவுடன் கேட்டான்.
மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான். தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான். இந்த உடை நீ இறக்கும் வரை அப்படியே இருக்கும் என்றார். ஆடை கொடுத்த மன்னருக்கு மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்பும் சமயத்தில் மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ஒருவேளை, அரசர் கொடுத்த இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே? என்று யோசித்தான். உடனே விரைந்து சென்று தன் பழைய உடைகளை எடுத்துக் கொண்டான்.
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை. எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரித்து வைத்துக் கொள்வதிலேயே அவனின் எண்ணம் இருந்ததால், அவனால் பரிமாறப்பட்ட பதார்த்தங்களைக்கூட சரிவர ருசிக்க முடியவில்லை.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த பிச்சைக்காரனுக்கு பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையைகளையே பார்த்தனர். இவ்வாறே நாட்கள் கழிந்தன. இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான். பிச்சைக்காரனின் பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டதை எண்ணி வருந்தினார்.
*நீதி :*
துன்பத்தையே எண்ணிக் கொண்டு இன்பத்தை இழந்துவிடக்கூடாது.
🌷🌷
பெற்றோர்கள் கௌரவத்தைக் கருத்தில் கொண்டு செய்யும் தவறுகள்.....
1.ஆடம்பரச் செலவுகள் செய்தல்
2.பிள்ளைகளை உயர்தர பள்ளி அல்லது கல்லூரியில் மட்டும் படிக்க வைத்தல்.
3.பொது இடங்களுக்கு மிகுதியான நகை அணிந்து வருதல்.
4.கடன் வாங்கி திருமணம் பந்தாவாக செய்தல்.
5.தேவை இல்லா விட்டாலும் கார் வாங்குதல்.
6.அடிக்கடி வெளியே சாப்பிடும் பழக்கம் கொள்ளுதல்.
7.தன்னை விட பொருளாதாரத்தில் குறைந்தவர்களுடன் பேசுவதை குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
8.பெரிய அந்தஸ்து உள்ளவர்களைத் தேடிச் சினேகிதம் கொள்தல்.
9.பிள்ளைகளுக்கு உயர் துணிவகைகள் , காலணிகள் என்று அதிகமாக செலவழித்தல்.
10.பிள்ளைகளிடம் தன் பொருளாதார நிலையை சரியாக சொல்லி வளர்க்கத் தவறுதல்.
குழந்தைகளுக்கு நம் பொருளாதாரத்தை
உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும்.. தங்களின் வளர்ப்பு.....