Today's Quotes
The greatest doer must also be a great dreamer.
The greatest doer must also be a great dreamer.
- Theodre Roosevelt
கஷ்டமான நேரத்தைக் கூட கடந்திடலாம். ஆனால் கஷ்டப்படுத்துபவர்களைக் கடப்பது தான் கடினமாக இருக்கிறது.
வாழ்வில் நீங்கள் தகர்க்க வேண்டியது உங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை மட்டுமே.
பிடிவாதகாரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதம் செய்யாதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேசுவதை தவிருங்கள்.
தூய எண்ணம் கொண்டிருங்கள். ஏனெனில், உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பே நீங்கள் வாழும் வாழ்க்கையாகும்.
- (ப/பி)
☕*இனிய காலை வணக்கம்*💐 🙏🏽
Historical Events on May 31.
● World No Tobacco Day
● 1910, 31st May: South African independence.
● 1929, 31st May: For the first time Mickey Mouse’s speaking cartoon Carnival Kid was released.
● 1942, 31st May: World War II – Japanese submarines began a series of attacks on Sydney.
● 1952, 31st May: Establishment of Sangeet Natak Academy in India.
● 1961, 31st May: South Africa became a republic.
● 1970, 31st May: A magnitude 7.9 earthquake shook Peru, killing at least 70,000 people and injuring 50,000 others.
● 1990, 31st May: Lenin International Peace Prize awarded to Nelson Mandela.
Famous Birthdays & Birth Anniversaries on May 31.
● 1683: Jean-Pierre Christin, a French physicist, mathematician, astronomer, and musician.
● 1725: Ahilyabai Holkar, the hereditary noble Sardar of the Maratha Empire.
● 1921: Suresh Hariprasad Joshi, an Indian novelist, short-story writer, literary critic, poet, translator, editor, and academic in the Gujarati language.
● 1979: Vir Das is an Indian comedian, actor, and comedy musician.
Death Anniversaries of famous people on May 31.
● 455: Roman Emperor Petronius Maximus was stoned to death by an angry mob.
● 1910: Elizabeth Blackwell, a British physician, notable as the first woman to receive a medical degree in the United States.
● 1994: Pandit Samta Prasad, an Indian classical musician, and tabla player.
● 2003: Anil Biswas, an Indian film music director, and playback singer.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
**********************************
*தினம் ஒரு கதை 📖*
**********************************
_*உங்கள் தகுதி என்ன...?*_
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவருக்கு கண் பார்வை கிடையாது.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், "ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார்.
சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார்.
அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான்.
அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான்.
உடனே துறவி "மன்னரே, வணக்கம்.
இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார்.
அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான்.
அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.
“அவரவர் தகுதி அவர்கள் பேச்சிலே அகப்படும்”
🌷🌷