MAY
19
Today's Special
*ஒருவரைப் பற்றி ஒருவர் பேசுவதற்கு பதிலாக ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டால் உலகில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்...!*
இரும்பை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் சொந்த துரு அதை அழித்து விடும்.
அதேபோல் யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது, ஆனால் அவர்களின் சொந்த மனநிலையால் முடியும்.
- ரத்தன் டாடா.
நம்முடைய எண்ணம் தான் வாழ்க்கை. நமது வலிமையான எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இன்று நம்பிக்கையுடன் எது நடக்கும் என்று நம்புகிறீர்களோ அது நிச்சயம் நாளை நடக்கும் என்பதே உண்மையாகும்.
எண்ணங்களின் துணை கொண்டு, கொண்ட இலட்சியத்தில் சிறிதும் மனம் தளராது தொடர்ந்து முன்னேறுங்கள்.
வெற்றி நிச்சயம்.
- (ப/பி)
Historical Events on May 19.
● 1536, 19th May: Anne Boleyn, the wife of King Henry VIII of England, was beheaded for adultery.
● 1743, 19th May: Jean-Pierre Christine developed a centigrade temperature scale.
● 1892, 19th May: Noted playwright and poet Oscar Wilde were released from prison.
● 1926, 19th May: Benito Mussolini declared Italy a fascist nation.
Famous Birthdays & Birth Anniversaries on May 19.
● 1824: Nana Saheb Peshwa II, an Indian Peshwa of the Maratha empire.
● 1908: Manik Bandopadhyay, an Indian writer and novelist.
● 1910: Nathuram Godse, the assassin of Mahatma Gandhi.
● 1913: Neelam Sanjiva Reddy, the sixth President of India.
● 1925: Malcolm X, an African American human rights activist.
● 1934: Ruskin Bond, an Indian author of British descent.
● 1938: Girish Karnad, an Indian actor, and film director.
● 1974: Nawazuddin Siddiqui, an Indian actor.
Death Anniversaries of famous people on May 19.
● 1904: Jamsetji Tata, an Indian pioneer industrialist, who founded the Tata Group.
● 1958: Sir Jadunath Sarkar, an Indian historian.
● 1979: Hazari Prasad Dwivedi, a Hindi novelist, literary historian, essayist, critic, and scholar.
● 1995: Vinay Chandra Maudgalya, an Indian classical musician.
● 1997: Sombhu Mitra, an Indian film and stage actor, director, and playwright.
● 1999: Ramesh Tendulkar, a Marathi novelist. He is the father of famous cricketer Sachin Tendulkar.
● 2008: Vijay Tendulkar, a leading Indian playwright, movie and television writer, literary essayist, political journalist, and social commentator.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
மனமும் நிறைவும்..
ஓர் ஊரில் ஓர் ஆள் இருந்தான்.. அவன் நிறைய பணம் சம்பாதித்தான்.. ஆனால் செலவு செய்ய மனம் வரவில்லை.. சேர்க்க
விரும்பிய அவனுக்குச் செலவழிப்பதில் விருப்பமில்லை.. மகா கருமி.. யார் வந்து உதவி கேட்டாலும் செய்ய மாட்டான்..
பணம் சேர்ந்து கொண்டே இருந்தது.. அவன் என்ன பண்ணினான் தெரியுமா..? வீட்டில் இருந்த பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஒரு மரத்தடியில் புதைத்து வைத்தான்.. வீட்டில் வைத்திருப்பதை விட புதைத்து வைப்பது பதுகாப்பானது என்று
அவன் நினைத்தான்.. அப்படியே செய்தான் வாரத்துக்கு ஒரு தடவை அவன் அந்த மரத்தடிக்கு வருவான் புதைத்து வைத்திருக்கிற இடத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பான்.. அப்புறம் போய் விடுவான்.. அவ்வளவுதான்..
தற்செயலாக ஒரு திருடன் இதை கவனித்தான்.. அவனுக்குச் சந்தேகம்.. இவன் ஏன் இப்படி வாரம் தவறாமல் வருகிறான்? எதற்காக அந்தக் குறிப்பிட்ட இடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான்? திருடனுக்குச் சந்தேகம் வலுத்தது.. ஒருநாள் நள்ளிரவு நேரம்.. திருடன் அந்த இடத்துக்கு வந்தான்.. தோண்டிப் பார்த்தான்.. புதையல் கிடைத்தது.. அவ்வளவையும் எடுத்துக் கொண்டு போய்விட்டான்..
அடுத்தவாரம் புதைத்து வைத்தவன் வந்து பார்த்தான். அந்த இடத்தில் மாற்றத்தைக் கண்டான் தோண்டிப் பார்த்தான். புதையலைக் காணவில்லை.. புலம்ப ஆரம்பித்துவிட்டான்..
இவன் அழுகிற சத்தம் கேட்டு.. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள்.. "என்ன விஷயம்?" என்று விசாரித்தார்கள்.. "புதைத்து வைத்திருந்தேன் போய் விட்டது" என்று புலம்பினான்..
அங்கேயிருந்த ஒரு பெரியவர் அவனை நெருங்கினார்.. "ஏம்ப்பா எவ்வளவு புதைச்சு வைச்சிருந்தே?” “ஏராளமா வச்சிருந்தேங்க... எல்லாமும் போச்சு" என்றான்.. “எப்பவாவது இங்கே வந்து பார்க்கறது உண்டா?” என்றார்.. “வாரம் தவறாமே வருவேன்.. பக்கத்துலே உக்கார்ந்து கொஞ்ச நேரம் பார்த்துக்கிட்டிருப்பேன் அப்புறம் போயிடுவேன்.."
"எப்பவாவது இதுலே இருக்கிற பணத்தை எடுத்து செலவு பண்ணியிருக்கிறாயா..?" என்றுக்கேட்டார் பெரியவர்.. "அப்பப்ப வந்து அதைப் பார்க்கிறது தான் வழக்கம்.. ஒருநாளும் அதைத் தொட்டது இல்லை" “அப்படின்னா.. இனி மேலும் அதேமாதிரி அப்பப்ப வந்து பார்த்துக்கிட்டுப் போயேன்” என்றார்.. “என்ன சொல்றீங்க..? எவ்வளவு காலம் ஆனாலும் நீ இந்தப் பணத்தை எடுத்துச் செலவு செய்யப் போறதில்லை! அப்படி இருக்கிறப்போ... இங்கே பூமிக்குள்ளே அந்தப் பணம் இருக்கிறதும் ஒண்ணுதான்.. இல்லாததும் ஒண்ணு தான்.."
பெரியவரின் வார்த்தைகள் அவனை சிந்திக்க வைத்தன.. அவனுக்குப் புரிந்தது.. ஒருத்தரிடம் இருக்கிற பணத்தைக் கொண்டு அவர் பணக்காரரா? ஏழையா? என்று முடிவு செய்வது சரியாக இருக்காது! அந்த செல்வத்தை அனுபவிக்கிற திறன், பயன்படுத்தற திறன், அதை வச்சுத்தான்.. அவரு ஏழையா? பணக்காரரா? என்பதை நிர்ணயம் செய்யவேண்டும்! அதுதான் சரி..
செலவு பண்ணத் தெரியாதவன் சேகரம் பண்ணிக் கொண்டே இருப்பதால் என்ன பயன்?
சிலசமயம் செலவு செய்ய
நாம் தயாராகி இருந்தாலும் கூட அந்தச் செல்வம் நமக்குப் பயன்படுவதில்லை..
ஆகையால் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு ..
Today's Quotes
Keep your eyes on the stars and your feet on the ground
Keep your eyes on the stars and your feet on the ground
- Theodre Roosevelt