Historical Events on March 30.
MAR
Ram Navami
காயங்கள் குணமாக காலம் காத்திரு! கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு!
*இன்றைய சிந்தனை.*
……………………………………………
*"சமயோசித புத்தி."*.
........................................
ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும்.
அறிவுக் கூர்மையால் கூட சில செயல்களை சாதிக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது. ஆனால், சமயோசித பண்பால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.
சிலர் தன்னுடன் ஒத்த சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பவர்களையும் தனது சமயோசித புத்தியினால் சூழ்நிலைக்குள் கொண்டு வரும் திறமையினைப் பெற்றிருப்பார்கள்.
இத்திறமை இயல்பாகச் சிலருக்கு அமைந்திருக்கும், சிலர் தங்களது சுயமுயற்சியின் மூலமாக இதனை வளர்த்து இருப்பார்கள்.
பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும்அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை.
அக்பரின் மூத்த அமைச்சர்ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது.
நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக் காகப் பீர்பாலை அவமானப் படுத்தவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார்.அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக்கொண்டிருந்தனர்.
அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்துவளர்ந்து இருந்தது.
தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்குவழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது.
இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியைவிட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய் விட்டது.
அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், "மன்னர் அவர்களே, பார்த்தீர்களா?
நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை!" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.
உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே,
"அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!" என்றார் ஒரே போடாக!
தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை பீர்பால்.
*ஆம்.. நண்பர்களே.;*
ஒரு மனிதன் வெற்றிக்கு அறிவுக் கூர்மை இருபது சதவீதம் மட்டுமே அணுசரனையாக இருக்கிறது,
சமயோசித ஆளுமையோ எண்பது சதவீதம் துணை புரிகிறது. பரபரப்பானச் சூழலில் பதற்றப் படாமல் சமயோசிதம் ஆகச் சிந்தித்து நடந்து கொள்ளவேண்டும்.
சமயோசிதப் புத்தி உள்ளவன் எந்தச் சூழலிலும் பிழைத்துக் கொள்வான்.
வாழ்வில் வெற்றியும் பெறுவான்.🌹🙏🏻🌹
*வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்.*
*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
● 1699, 30th March: The Khalsa tradition was initiated by the Tenth Guru of Sikhism, Guru Gobind Singh.
● 1842, 30th March: Dr. Crawford Long, an American surgeon, used ether for anesthesia during surgery.
● 1856, 30th March: Treaty of Paris ended the Crimean War.
● 1919, 30th March: Mahatma Gandhi announces opposition to the Rowlatt Act.
● 1929, 30th March: Air postal service between India and England began.
● 1949, 30th March: The state of Rajasthan formed.
● 1950, 30th March: Murray Hill invented the phototransistor.
● 1977, 30th March: Swami Agnivesh merged his Bharatiya Arya Sabha Party with the Janata Party.
● 1981, 30th March: US President Reagan was attacked while passing by the hotel. He was fired on six bullets, the last bullet of which hit his chest.
● 1992, 30th March: Indian filmmaker Satyajit Ray honored with the Oscar Award.
Famous Birthdays & Birth Anniversaries on March 30.
● 1853: Vincent van Gogh, a Dutch post-impressionist painter.
● 1894: Sergey Ilyushin, a Soviet aircraft designer.
● 1899: Sharadindu Bandyopadhyay, an Indian Bengali-language writer.
● 1906: General Kodendera Subayya Thimayya, the 6th Commander-in-Chief of the Indian Army.
● 1908: Devika Rani, an actress in Indian films.
● 1938: Klaus Martin Schwab, the founder and executive chairman of the World Economic Forum.
● 1977: Abhishek Chaubey, an Indian filmmaker.
● 1992: Palak Muchhal, an Indian playback singer.
Death Anniversaries of famous people on March 30.
● 1664: Guru Har Krishan, the eighth of the ten Sikh Gurus.
● 1925: Rudolf Steiner, an Austrian philosopher, social reformer, architect, esotericist, and claimed clairvoyant.
● 2002: Anand Bakshi, a popular Indian poet, and lyricist.
● 2005: O. V. Vijayan, an Indian author, and cartoonist.
*Knowledge Spread ✍️📚🇮🇳*