அனுபவித்த துன்பங்களை
மறந்து விடு
அனுபவம் அளித்த
பாடங்களை மறந்து
விடாதே.
🙏🙏🙏
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
எதிர்பார்த்த போது
கிடைக்காத எதுவும்,
அதன் பிறகு
எத்தனை முறை
கிடைத்தாலும்
மகிழ்ச்சி அளிப்பதில்லை.
அன்பும் அப்படித்தான்!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவினால் தலைவலி நீங்கும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
ஐரோப்பிய நாடான 'எஸ்தோனியாவில்' பிரதமரான முதல் பெண்மணி *'காஜ கல்லாஸ்'* என்பவராகும்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
வற்றல் குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால், அதில் சிறிது தேங்காய்ப் பால் சேர்த்தால் உப்பு குறைந்து சுவை கூடும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
வாழ்விலே நம்பிக்கைதான் அடிப்படை. அதன்மூலம் அனைத்தையும் சாதிக்கலாம்.
*-பாரதியார்*
📆 *இன்று அக்டோபர் 14-*
▪️ *உலகத் தர நிர்ணய நாள்.*
▪️ *1964-இல் மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1942- *சிவசங்கரி* (தமிழ் எழுத்தாளர்)
💐 *நினைவு நாள்* 💐
⭕2009- *சி.பி.முத்தம்மா* (இந்திய பெண் சாதனையாளர்)
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️