25
National Catfish Day
Innovation distinguishes between a leader and a follower.
வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுவது ஏன்?_*
வாழும்விதம் தவறாக இருப்பதால்
சலிப்படைவதை தவிர்க்க...
பல காரணங்களை,
பல பிடிமானங்களை,
பிரச்சனைகளை...
தினமும் தேடிப் பிடித்துக் கொண்டு தொங்குகிறோம்
'மரண' பயம்.
'தனிமை' பயம்.
புதிது புதிதாக
ஆசைகளை உருவாக்கிக் கொண்டே நாட்களைக் கடத்துவது
ஆசைகள் நிறைவேறினாலும்,
சலிப்பு, சோர்வு...
ஆசை நிறைவேறாவிட்டால்,
எதிர்பார்ப்பு, கவலை, கோபம், விரக்தி.
உண்மையில் எங்குதான் தவறு உள்ளது?
நியாயமான ஆசைகளை கூட
அடக்கி வைத்து வாழ்வத்தில் தவறு இருக்கிறது
காரணம், காரணம், காரணம் எல்லாவற்றிற்கும்
ஒரு காரணம்...
சொல்லி பழகியாகிவிட்டது
சில நிமிடங்கள் அல்ல,
சில நொடிகள் கூட,
அமைதியாக இருக்க முடியவில்லை.
கடந்து வந்த வருடங்களை
திரும்பி பார்த்தால் தன்
சுய வளர்ச்சி, பக்குவம், தெளிவு என்னவென்று தெரியும்
அதுதான் வாழ்நாள் சாதனை.
இயற்கை கருணையோடு
தன் செய்தியை வெளிப்படுத்தி வழிகாட்டுகிறது என்பதை,
பார்க்கும் கண்கள்...
கேட்கும் காதுகள்...
உள் வாங்கும் இதயம்...
கொண்டுவிட்டால் நொடிக்கு நொடி வாழ்வில் புதுமைதான்.
🌷🌷