16
Fresh Veggies Day
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*_கஷ்டப்பட்டு ஞாபகம் வைத்துக்_*
*_கொள்ள வேண்டிய_* *பொய்களை* *_விட,_*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*அனுபவம் என்பது*
*தவறுகளை* *திருத்திக் கொள்வது ...*
*ஆணவம் என்பது*
*தவறுகளை* *நியாயப்படுத்துவது ...*
*ஆணவம் வாழ விடாது*
*அனுபவம் வீழவிடாது ...*.
🌹 *புது காலை வணக்கம்* 🙏🏻
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*_எந்த சிரமமும் இல்லாமல்_*
*_சொல்லி விட்டுப் போகிற_*
*உண்மை* *_எப்போதுமே சிறந்தது....!!_*
🙏🏻 *செழிப்பான காலை வணக்கம்* 🙏🏻
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Historical Events on June 16.
● 1884, June 16th: The first roller coaster in the USA opened at Coney Island, New York. It was named Switchback Railway.
● 1903, June 16th: Pepsi Cola became the official trademark for this beverage brand.
● 1903, June 16th: The Ford Motor Company began.
● 1911, June 16th: IBM was founded as the Computing-Tabulating-Recording Company in New York.
● 1946, June 16th: Indian leaders were invited to London to form an interim government.
● 1963, June 16th: Valentina Tereshkova became the first female astronaut to travel in space.
● 2010, June 16th: Bhutan parliament adopted the Tobacco Control Act that made this country the first one to impose a total ban on tobacco.
● 2012, June 16th: Coca-Cola resumed its business in Myanmar after 60 long years of absence.
Famous Birthdays & Birth Anniversaries on June 16.
● 1920: Hemant Kumar, an Indian singer and music director.
● 1924: Idris Shah, an author, and teacher in the Sufi tradition.
● 1934: Kumari Kamala, an Indian dancer, and actress.
● 1936: Akhlaq Mohammad Khan, an Indian academician and Urdu poet.
● 1950: Mithun Chakraborty, an Indian film actor.
Death Anniversaries of famous people on June 16.
● 1858: John Snow, an English physician.
● 1861: Harish Chandra Mukherjee, an Indian journalist and patriot.
● 1925: Chittaranjan Das, an Indian freedom fighter, political activist, and lawyer
● 1944: Prafulla Chandra Ray, an eminent Bengali chemist, educationist, historian, industrialist, and philanthropist.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
தவறுகளை குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை. இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதை அவசியத்தை வலியுறுத்துகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளை ஏசுவதும், பேசுவதும் உருட்டி மிரட்டி வளர்ப்பதும், அடித்து துன்புறுத்துவதும் பொதுவாக காணப்படும் விஷயங்கள். குழந்தைகளை இப்படியெல்லாம் கண்டித்து வளர்ப்பது அவசியம்தானா? என்ற கேள்வி மனதில் எழலாம்.
குழந்தைகளின் நடத்தைகளில் தவறான, கெட்ட நடத்தை எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பது, படிக்காமல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பது, ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் அதிகமாக உண்பது ஆகியவையெல்லாம் கெட்ட நடத்தைகள் அல்ல. இவையெல்லாம் குழந்தைகளுக்கு பிடித்தவை.
இவற்றைக் குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை. உதாரணமாக அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதனால் பல்லுக்கு உண்டாகும் கெடுதல் என்ன என்று குழந்தைகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே வந்தால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு குழந்தை தானாகவே சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளும். மாறாக பெற்றோர்கள் அடித்துத் திருத்த நினைத்தால் சாக்லேட் மீது ஆசை அதிகமாகி குழந்தை ஏராளமான சாக்லேட்டுகளை சாப்பிட ஆரம்பித்துவிடும். சில வேளைகளில் பெற்றோர்களுக்கு தெரியாமல் சாப்பிடவும் செய்யும். பொய் பேசுவதும் மறைப்பதும், திருட்டுத்தனமும் இவ்வாறுதான் தொடங்குகிறது.
பிறர் பொருளை திருடி வைத்துக் கொள்வது, பிற குழந்தைகளை அடிப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவைகள் கெட்ட நடத்தைகளின் வகையில் அடங்கும். இக்கெட்ட நடத்தைகளை குழந்தை எங்கேயிருந்து பழகிக் கொண்டது? பெற்றோர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றவர்களிடமிருந்தே குழந்தை இந்நடத்தைகளை கற்றுக் கொள்கிறது. இவைகளை கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.
ஓர் நடத்தையை அதிகப்படுத்த வேண்டுமெனில் வலிமையூட்டிகளை (Reinforcement) பயன்படுத்த வேண்டும். பரிசு, பாராட்டு, மகிழ்ச்சியான முகபாவனை, அன்பு, அரவணைப்பு ஆகியவைகளை வலிமையூட்டிகள் எனலாம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இவற்றை அளிக்கும்போது எந்தவொரு நடத்தையையும் அதிகப்படுத்தலாம்.
தவறான நடத்தைகளை குறைக்க உளவியல் இரண்டு விஷயங்கள் உண்டு. முதலாவது நடத்தைக்குறைப்புகள் (Negative Reinforcement) இரண்டாவது தண்டனை, முகத்தை சுழிப்பது, பிடிக்கவில்லை என்பதைக் காட்டும் முகபாவனை, திட்டுதல், விலகிச் செல்லுதல், எந்த எதிர்வினையும் புரியாமல் இருத்தல், உன் நடத்தை எனக்கு பிடிக்கவில்லை என நேரிடையாகக் கூறுதல் ஆகியவை நடத்தை குறைப்புகள் ஆகும். அடித்தல், கிள்ளுதல், தள்ளி விடுதல், சூடு வைத்தல் போன்றவை தண்டனை வகையில் அடங்கும்.
நடத்தை குறைப்புகளை பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு உடல்ரீதியான தீங்கு ஏதும் ஏற்படாது. ஆனால் தண்டனையைப் பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு வலி போன்ற உடல் தீங்குகள் ஏற்படும்.
நீங்கள் உங்கள் குழந்தைகளை ஒரு அடி அடித்துவிட்டால், ஒரு முறை சூடு போட்டு விட்டால் அதன் பின்னர் அது பற்றிய பயம் சுத்தமாக இல்லாமல் போய்விடும் எனவே ‘அடித்து விடுவேன்’, ‘உதைத்துவிடுவேன்’, ‘சூடுவைத்து விடுவேன்’ என வாயளவில் மிரட்டலாமே தவிர ஒருபோதும் அவற்றை செய்து விடக்கூடாது. மிரட்டிக் கொண்டிருக்கின்ற வரை பயமுறுத்திக் கொண்டு இருக்கலாம். மேலும் மிரட்டுவதே அதிகப்பட்சம்.
அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவணைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்...
பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻
🙏நன்றி🙏
வாழ்க வளமுடன்
🙏💱 *குழந்தைகளுக்கு செல்போன் தரும் 'வலி'* 💚❤️
கொரோனா காலகட்டத்தில் அறிமுகமான ஆன்லைன் வகுப்பு ஏற்படுத்திய தாக்கம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இருந்து மாணவர்களை மீள முடியாமல் வைத்துவிட்டது. தொடக்க கல்வி பயிலும் குழந்தைகளின் கைகளில் கூட சர்வ சாதாரணமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்த பெற்றோரே கையில் ஸ்மார்ட்போனை கொடுக்கும் நிலைமை உண்டாகிவிட்டதுஅதனால் ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது. அப்படி குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ பார்த்தலோ அல்லது வீடியோ கேம் விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் ஏற்பட தொடங்கிவிடும். அது நாளடைவில் வலியை அதிகப்படுத்திவிடும்.குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது. அது சட்டென்று கழுத்துவலிக்கு வித்திட்டுவிடும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி உண்டாகுவதற்கும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. செல்போன் பார்க்கும்போது நேராக அமர்ந்த நிலையில் இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்போது கல்வி சம்பந்தமான அப்ளிகேஷன்கள் ஏராளமான அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அவை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதிலேயே அதிக நேரத்தை செலவிடுவது கழுத்து வலிக்கு வழிவகுப்பதோடு மட்டுமில்லாமல் மூளைக்கும் அயர்ச்சியை ஏற்படுத்தி விடும். அதன் தாக்கமாக தேவையற்ற வலி, வேதனைகளை அனு பவிக்க வேண்டியிருக்கும்.