Today's Quotes
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- டாக்டர் ஏ .பி .ஜே . அப்துல் கலாம்
வாழ்க்கையில் தவறுவதில் தவறில்ல சாமி. ஆனால் அந்த தவறுகளிலிருந்து நீ பாடம் கற்றுக்கொள்ள தவறக்கூடாது சாமி.
வலிகள் நிறைந்த வாழ்க்கையில் வலிமையைக் கொடுக்க நான் இருக்கின்றேன் அது போதாதா சாமி உனக்கு.
எண்ணியதெல்லாம் நிறைவேறும், நம்பிக்கையோடு இரு நான் இருக்கிறேன்.
உனக்கு வெளிச்சமாக நான் இருக்கும் வரை உன் வாழ்வில் இருள் சூழாது சாமி. நிம்மதியாக உன் கடமையை செய் சாமி.
- கணக்கன்பட்டி பழனிச்சாமி சித்தர்.
🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
*இன்றைய சிந்தனை.*
......................................
*"குறுக்கு வழியில் கிடைக்கும் வெற்றி''.*
.................................
''வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்னும் எண்ணம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு “இவரின் உதவி வேண்டும். அவரிடம் சிபாரிசு பெற வேண்டும்” என்று நினைத்து, பிறரை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, வெற்றிக்காக காத்து இருப்பவர்களும் உண்டு.
“வாழ்க்கையின் வெற்றி” என்பது வெளியில் இருந்து பிறர் தரும் ஆதரவினாலும், சாதகமான சூழலினாலும் மட்டுமே நிகழ்கிறது” என்னும் கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
As a man thinketh” என்பது புகழ்பெற்ற எழுத்தாளரான “ஜேம்ஸ் ஆலன்” எழுதிய நூலாகும்.
அந்த நூலில் ,' "பூமியில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் வித்திலிருந்து மரம் உண்டாகிறது.
அதுபோல மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் நினைப்பிலிருந்து அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகிறது” எனக் குறிப்பிடுகிறார்.
சீனாவிலுள்ள ஒரு மன்னன் உலகத்தின் வரலாறு முழுவதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினான். “உலக வரலாறு அனைத்தையும் தெரிந்துகொண்டால் ஞானியாகிவிடலாம்” என்றும் நினைத்தான்.
அவனது அமைச்சரவையில் இருந்த அறிஞர் களையும், புலவர்களையும் அழைத்தான். உலக வரலாற்றை எழுதித் தரும்படி கட்டளை இட்டான். சில ஆண்டுகள்கழிந்தன.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் உலக வரலாற்றை எழுதிக் கொண்டு பல அறிஞர்களும், புலவர்களும் வந்தார்கள்.
நூற்றுக்கணக்கான குதிரை வண்டிகளில் விரிவாக எழுதப்பட்ட உலக வரலாற்றுச் சுவடிகள் கொண்டு வரப்பட்டன. அரண்மனை மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு வரலாற்றுச் சுவடிகள் குவிந்தன.
மன்னன் அதிர்ச்சி அடைந்தான்..''உலக வரலாறு இவ்வளவு பெரியதா? இவற்றை என்னால் படித்து முடிக்க முடியாது. மிகவும் சுருக்கமாக எழுதித் தாருங்கள்” என்றான் மன்னன்.
“உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளை சுருக்க முடியாது. அதிகமாக சுருக்கினால் உண்மைகளைத் தெரிய முடியாது” என அறிஞர்கள் சொன்னார்கள்.
“எப்படியாவது நீங்கள் சுருக்கித் தாருங்கள்” என விடாப்பிடியாக விரட்டினான்.
பயந்துபோன அறிஞர்களும், புலவர்களும் ஒரு ஜென் குருவை சந்தித்து ஆலோசனை கேட்டார்கள். ஜென் குரு மன்னனை சந்திக்க நேரில் வந்தார்.
“உலக வரலாற்றை மிகவும் சுருக்கமாக நான் எழுதித் தருகிறேன்” என்று ஜென் குரு கூறினார்.மறுநாள், மன்னனை சந்தித்த ஜென் குரு ஒரு ஓலையை அவனிடம் நீட்டினார்.
அந்த ஓலையில்.. “உலகில் மனிதர்கள் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். இறந்துபோனார்கள்” என எழுதப்பட்டு இருந்தது.மன்னன் ஆச்சரியமாகப் பார்த்தான்.
“உலக வரலாற்றை மிகவும் சுருக்கமாக இப்படித்தான் எழுத முடியும்” என்று சொன்னார் ஜென் குரு.மன்னனுக்கு உண்மை புரிந்தது.
*ஆம்.,நண்பர்களே..,*
எந்த வெற்றியைப் பெறுவதற்கும் முறையான வழி முறையும், தேவையான கால அவகாசமும் தேவை.
குறுக்கு வழியில் கிடைக்கும் ‘வெற்றி’ நிரந்தரமானது அல்ல.. தெளிவானதும் அல்ல..
இதை நன்கு புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்....❤🙏🏻🌹
🌼நன்றி 🌼
🌼படித்ததால் மட்டுமல்ல
பகிரும்போதும் சந்தோசமே...
படித்ததில் பிடித்தது