MAY
Those who dare to fail miserably can acheive greatly.
<3 ... கணவர் தந்த பரிசு ... <3
திருமணமான இரண்டு வருடத்திற்கு பிறகு குழந்தை
கற்பமான பெண்களுக்கு மட்டும் தூக்கம் கிடையாது என்பது உண்மை இல்லை.....!
அவளை கட்டிய கணவனுக்கும் தான்.....!
அவள் எப்போது வாந்தி எடுத்தாலோ அன்றிலிருந்து பிறக்க போகும் குழந்தை எப்படி இருக்கும்..???
பிரசவ வலியை என் மனைவி தாங்கிகொள்வாளா..???
"அய்யகோ" என் தாயார் சொல்லியிருக்கிறாரே ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது அவள் உயிர் போய் வருவதற்கு சமமாம் நீ எப்படிடா "தங்கம்" தாங்குவா..???
என்று தன் மனைவியை பாவமாக பார்க்கிறான்.....!
அவன் மனதில் நினைத்ததை அவள் புரிந்துகொண்டாள்.....!
உன்னை விட்டு நான் செத்துப் போய்றமாட்டேன்டா.....!
என் உயிர்தான் உன்னிடம் இருக்கே என்று அவன் தோளில் சாய்ந்து கண் கசிகிறாள்.....!
மருத்துவரை பார்க்க எப்போது செல்ல வேண்டும் என்று கேட்கையில் தேதி கொடுத்திருக்கின்றனர்.....!
இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது.....!
எனக்கு பயமாகவும் இருக்கிறது என்கிறாள்.....!
முதல்நாள் கணவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். அவளை ஒரு குழந்தை போல் பார்த்துக்கொள்கிறான்.....!
இரண்டாவது நாள் அதாவது கடைசி நாள். இரவு 10மணி போல் யாரோ மௌனமாக அழும் சத்தம் கேட்க தூக்கிவாரிப்போட..... கணவனுக்கு அருகில் படுத்திருந்த மனைவியை திருப்பி அவள் முகத்தை பார்க்கிறான்.....!
கணவனை கட்டியனைத்து அவன் முகத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்து பயமா இருக்குடா என்கிறாள்.....!
ஒரு நிமிடம் பதறிப்போன கணவன்,......
"அழாதேம்மா" நான் இருக்கேன்டா... என்று சொல்ல சரியாக இரவு 11;00 மணியளவில் திடீரென "அம்மா" என்று அலறுகிறாள்.....!
பயந்து போனவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு Car.ல்.. மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிடுகிறான்.....!
பல பல கற்பனைகள் அவன் மனதில் ஓட நேரமும்ஆக ஆக.....
அழுகுரலை கேட்க முடியாமல் தலை மீது கை வைத்துக்கொண்டு "ஆண்டவா" என்று மண்டியிட்டு கணவன் அழுவது தெரியாமல் மௌனமாக அழுகிறான்.....!
ஆபரேசன் தியேட்டரில் ஒரு பெரும் சத்தம் "அம்மா" என்று கேட்கிறது. Dr. வெளியே வந்து சொல்கிறார் உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது உள்ளே சென்று பாருங்கள் என்று.....!
காற்றை விட வேகமாக உள்ளே சென்று மனைவியை பார்க்கிறான்.....!
அவள் அரை மயக்கத்தில் இருக்க.....!
மெதுவாக பிஞ்சு சிசுவை தூக்கி மார்போடு அணைத்துக்கொள்கிறான்.....!
நேரம் சரியாக இரவு 12:00 ஆக அப்போது திடீர் திடீர் என்று வானவேடிக்கை (Happy New Year... என்று Hospital வெளியில் சத்தம் கேட்கிறது.)
அந்த சத்ததை கேட்ட மனைவி சொல்கிறாள் இந்த புது வருடத்தில் "என் கணவர் தந்த பரிசு" என்று.....!
சத்தமாக சிரித்துக்கொண்டே "இந்த புது வருடத்தில் எனக்கு ஆண்டவன் தந்தது இரண்டு பரிசு" என்கிறான் அந்த காதல் கொண்ட கணவன்.....!
ஆமாம் நண்பர்களே... மனைவியும் குழந்தையும் அமைவது கடவுளின் பரிசுதானே.... மனைவியையும் குழந்தைகளையும் ஆழமாக நேசியுங்கள்... ஆனந்தத்தை தவறவிடாதீர்கள்.....!!!!!!
படித்ததில் பிடித்தது.