வாழ்வதற்கான செலவு மிக குறைவே...
அடுத்தவரை போல வாழ்வதற்கான செலவுதான் இங்கு மிக அதிகம்...
எவரது வார்த்தைகளாவது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் நீங்களும் பதிலுக்கு அவர்களை பழிவாங்கும் எண்ணம் எடுக்காதீர்கள்.
அது மறுபடியும் உங்களுக்குத் தான் வலியை தரும். உங்கள் உள்ளத்தை அழுக்காக்கும். மாறாக மௌனமாக கடந்து போங்கள். உங்கள் சார்பாக விதி அவர்களை நன்றாகவே கவனித்துக் கொள்ளும்.
எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள் அவர்கள் நம்மை தேடும் அளவிற்கு.
நிராகரிக்கும் இடத்தில் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே சிறந்த பதிலடியாகும்.
- (ப/பி)
Historical Events on May 3.
● 1908, 3rd May: Freedom fighter Prafulchand Chaki shot himself after executing Muzaffarpur bombings.
● 1913, 3rd May: Dadasaheb Phalke’s ‘Raja Harishchandra’, the first Indian silent film, released.
● 1939, 3rd May: Netaji Subhash Chandra Bose formed the All India Forward Bloc.
● 1947, 3rd May: Formation of the Indian National Trade Union Congress (INTUC).
● 1998, 3rd May: A historic decision by European leaders to accept the euro as the European currency.
● 1999, 3rd May: Edwin Jaskulski, a 96-year-old man, set the world record for the 100m in 24.04 seconds.
● 1999, 3rd May: The infiltration of Pakistani soldiers on the Indian side resulted in the Kargil war.
● 2002, 3rd May: An Indian Air Force MiG-21 crashed into a bank in Jalandhar, killing eight and injuring 17.
Famous Birthdays & Birth Anniversaries on May 3.
● 1469: Niccolo Machiavelli, an Italian Renaissance diplomat, philosopher, and writer.
● 1896: V. K. Krishna Menon, an Indian politician.
● 1951: Ashok Gehlot, an Indian politician and the Chief Minister of Rajasthan.
● 1959: Uma Bharti, an Indian politician and former Chief Minister of Madhya Pradesh.
Death Anniversaries of famous people on May 3.
● 1912: Maulvi Nazir Ahmad Dehlvi, an Urdu novel writer, social and religious reformer, and orator.
● 1969: Zakir Husain, the third President of India.
● 1971: D. R. Gadgil, an Indian economist, institution builder, and the vice-chairman of the Planning Commission of India.
● 1977: Hamid Dalwai, an Indian social reformer, thinker, activist, and writer.
● 1981: Nargis Dutt, an Indian film actress.
● 2006: Pramod Mahajan, an Indian politician.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
Action to be effective must be directed to clearly conceived ends.
- Pandit Jawaharlal Nehru
**********************************
*தினம் ஒரு கதை 📖*
**********************************
_*உங்களுக்கு தெரியுமா...?*_
அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.
அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.
ஆகவே, மந்திரி ஒரு தந்திரம் செய்தார்.
‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’
‘ஆமாம்’ என்றான் அரசன்.
‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’
‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி.
‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’
‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி.
வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.
அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்.
அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.
இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான்.
குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’
அவர் எதுவும் பதில் பேசவில்லை.
சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார். அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.
இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.
‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’
“அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூர தேவையில்லை, பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலே போதும்”
🌷🌷