*கேட்கும் முன் கிடைத்து விடும் எதுவுமே...*
*இழக்கும் போது வலிப்பதே இல்லை..!!*
*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
The function of leadership is to produce more leaders, not more followers.
*இன்றைய சிந்தனை.*
..................................
*‘’ நிறைவான வாழ்க்கை(Lifestyle)’’.*
.....................................
நமது நாட்டில் பணக்காரர்கள் 10% என்றால் ஏழை மக்கள் 30% மீது 60% நடுத்தர வர்க்கத்தையே சேர்ந்தவர்கள். இப்போதைய சூழலில் கல்வி, மருத்துவம் என நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் வாழ்வதே பெரிய சவாலாகத்தான் உள்ளது.
காலையில் வேலைக்கு போலாம் என பார்த்தால் திடீரென பஸ் கட்டணம் 2 மடங்கு ஆகிவிட்டது,ஒரு வழியாக பட்ஜெட்டில் அதற்கும் சேர்த்து ஒதுக்கி துண்டு விழாமல் பார்த்து கொள்கிறோம்.
வேலை முடிஞ்ச அசதியில் பொழுதுப் போக்கிற்காக டிவி போட்டால் எந்த சேனலும் எடுக்க மாட்டேங்குது. விசாரித்தால் சேனலுக்கு கட்டணமாம், செட்டாப் பாக்ஸ்ஸாம்.
இப்படி இருப்பிடம், உடை , உணவு, கல்வி,மின்சாரம்,
மருத்துவம், அர்த்தம் இல்லாத பண்டிகைகள் என ஏகப்பட்ட இதர செலவுகள்..
அடிப்படை ஊதியம் வாங்குபவர்கள் குடும்பத்தை நடத்துவது என்பதே இப்போது மிகவும் பெரிய சவலாக இருக்கிறது.
எப்படியும் வாழ்ந்து தானே ஆக வேண்டும்.?
சரி.,எப்படி வாழ்வது.? இந்த இறுக்கமான சூழலிலும் நம்மை மன அழுத்தம் இல்லாமல்(‘’STRESS FREE’’) ஆக வைத்து கொள்ள வேண்டும்,
அதே நேரம் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்.
அதற்கான எனக்கு தெரிந்த சில எளிய வழிமுறைகள்..
நாளை என்றால் காலாதாமதம் ஆகி விடும். இன்றே வாழ்ந்து விடுங்கள். இன்றைக்கு மட்டும் வாழுங்கள்.
நாளை வர உள்ள பிரச்னைகள் குறித்து இன்றைக்கு கவலைப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள்...
உங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி எல்லாவற்றை் சரியாக்க முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் யாருடன் பழகினாலும் அவர்களுடன் இணக்கமாக பழக முயற்சி செய்யுங்கள்.
அடுத்து முக்கியமான ஒன்று,மற்றவர்களுடன் உங்களையும் குடும்பத்தையும் ஒப்பிட்டு பார்க்காதீங்க.
உங்களிடம் என்ன இருக்கின்றதோ அதை வைத்து சிக்கனமாக வாழுங்கள்.
அக்கம் பக்கத்தினரிடம் முடிந்த வரை அவர்களது ஊதியம் குறித்து உரையாட வேண்டாம்.
அதிக நேரத்தை குடும்பத்துடன் செலவழியுங்கள்.
உற்சாகமான தோற்றத்துடன் இருங்கள். பண்புடன் பழகுங்கள்.
புகழ்வதில் தாராளம் காட்டுங்கள். மற்றவர்களின் செயலிலும் குற்றம் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள்.
உங்களை விட இந்த உலகத்தில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என நம்புங்கள்.
புதியவற்றை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்களை கொண்டாடுங்கள்.
ஒரு போதும் உங்களை தரம் குறைவாக உதாசீனப் படுத்த வேண்டாம்.
இந்த உலகில் ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு கொண்டே போனால் அதற்கு முடிவே கிடையாது..
*ஆம்.,நண்பர்களே..,*
யார் அதிகம் சம்பாதிக் கின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்..
,இந்த உலகில் யார் அதிகம் மகிழ்ச்சி உடன் இருக்கிறார் களோ அவர்களே வெற்றி பெற்றவர் என்ற எண்ணத்தை கொண்டு இருங்கள்..
இப்படி வாழ்ந்தாலே போதும் நிறைவான வாழ்க்கை (Lifestyle) வாழ்ந்திடலாம்.......🌹🙏🏻❤