APR
B.R. Ambedkar Remembrance Day/ Baisakhi Day/ Mahavir Jayanti
அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே,அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.
🌺 *கர்மவினை*
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.
இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் “சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்” என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.
அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் ” கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது” என்றும் சொன்னாள் !!
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
*நீதி:*
உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!
❣❣❣
வீட்டில் கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில்,
மகன்: அம்மா.,அம்மா, "நாய்"னா என்னது மா?
அம்மா: உங்க அப்பாதான்டா "நாய்".
மகன் : அப்பா.,அப்பா., "பேய்"னா என்னபா?
அப்பா: உங்க அம்மாதான்டா "பேய்"
மகன்: "முண்டம்"னா என்னபா?
அப்பா: நம்ம வீட்டுல கிடக்குதே "நாற்காலி", அதான்டா 'முண்டம்'
மகன் : "விஷம்"னா என்னபா?
அப்பா : உங்க அம்மா காலைல குடிக்க காபி தாராலே அதான் 'விஷம்'
மகன் : "தண்டம்"னா என்னபா?
அப்பா : நம்ம வீட்டுக்கு விருந்தாளினு சொல்லிட்டு வாராங்களே அவங்கதான் 'தண்டம்'..
அம்மா கடைக்கு போறாங்க.
அப்பா தோட்டத்துக்கு போறாங்க.
பையன் மட்டும் வீட்ல தனியா இருக்கான்!!!!
இந்த நேரத்துல அவங்க சொந்தகாரங்க வீட்டுக்கு வாராங்க, இப்பா நம்ம பையனின் உபசரிப்பு எப்படி இருந்ததுன்னா,
வாருங்கள் தண்டங்களே, வந்து முண்டத்தில் அமருங்கள்.
பேய் கடைக்கு சென்றிருக்குது!
நாய் தோட்டத்திற்கு சென்றிருக்குது!
உங்களுக்கு அருந்த சூடாக விஷம் கொண்டு வருகிறேன்,....
சொந்தகாரங்க எடுத்தாங்க பாருங்க ஓட்டம்!!!!
குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளை தான் பேசுவார்கள்😀
உங்கள் குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்!! 😀
அவர்கள் மற்றப் பெற்றோரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து விட்டால்!??!!!!!😆😁
🪷🪷🪷