APR
Aprils Fools' Day / Prevention of Blindness week/ Odisha Foundation Day
Success is not final; failure is not fatal; it is the courage to continue that counts.
ஏப்ரல் 1:
இன்று முட்டாள்கள் தினம்!
👉1500-களில் ஐரோப்பியர்கள் கடைப்பிடித்த ஒரு பழக்கமாக ஏப்ரல் 1 கூறப்படுகிறது.
👉அப்போது, அந்த நாளின் பெயர் ஏப்ரல் மீன்கள் தினம்.
👉ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஃபிரான்ஸ்ஸில் உள்ள ஆறுகளிலும் நீரோடைகளிலும் நிறைய மீன்கள் இருக்கும்.
👉அப்போது மீன்பிடிப்பது மிகவும் சுலபம்.
👉ஆகையால் மீன்கள் ஏமாறும் தினமாக ஏப்ரல் 1 கருதப்பட்டது.
👉காலப்போக்கில் மனிதர்களை ஏமாற்றும் தினமாக அது மாற்றம் அடைந்து, ஏப்ரல் 1-ம் தேதி, முட்டாள்கள் தினம் என ஆனது.
👉புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1-ம் தேதிதான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும்.
👉1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி புதிய ஆண்டுத் தொடக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார்.
👉ஆண்டுத் தொடக்க நாளாக ஜனவரி 1-ம் தேதியை அறிமுகம் செய்து வைத்தார்.
👉போப்பின் இந்த அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.
👉இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை.
👉பிரான்ஸ் 1852-ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
👉புதிய வழக்கத்தை ஏற்றுக்கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள், இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள்.
👉1582-ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508-ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
👉அதேபோல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
👉1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
👉ஜனவரி மாதம் 1-ம் தேதியைப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர்.
👉இதுவே பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் 'ஏப்ரல் பூல்' விரிந்து பரவி இருக்கிறது.
👉1986-ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, 'ஏப்ரல் பூல்ஸ் டே' திரைப்படம் மிகப் பிரபலமானது.
சோதனை உண்மை✍🏼🌹
அனைத்தும் அறிந்த இறைவன் நம்மைச் சோதிப்பது ஏன்? கஷ்டங்களைச் சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?”என்று ஒவ்வொரு மனிதனும் சிந்திப்பது
உண்டு.
நாம் சோதனைகளைச் சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையைச் சந்திக்கும் போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது.
நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது
நமது உண்மையான குணத்தைப் பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளைத் தருகிறான்.
கெட்டவர்களுக்கும், சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான்.
ஆகையால்தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை.
இறைவன் நம்மைச் சோதிப்பதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல. அவனுக்கு ஒருவர் மனதின் உள்ளே இருப்பது என்னவென்று தெரியும்.
அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துக் கொள்ள. நம்மை நாம்அறிந்துக் கொண்டால் மட்டும்தான்
நம்மைத் திருத்திக் கொள்ளமுடியும்
இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்
இது தான் உண்மை.✍🏼🌹