அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் அவ்வையார்,
ஆனால் நான் பிறக்க விரும்புகிறேன்...
ஏழைகளின் பசி தீர்க்க அட்சய பாத்திரமாக,
மனித குலத்திற்கே துகில் கொடுக்கும் தறியாக,
உயிரினங்கள் அனைத்தும் தஞ்சம் அடையும் நிழற்குடையாக,
குழந்தை துயிலும் தொட்டிலாக,
உழவனின் ஏராக,
மாணாக்கரின் எழுதுகோலாக,
ஆசிரியர்களின் கண்டிக்கும் கரமாக,
கடவுளை நினைவூட்டும் ஆலய மணியாக,
குருவிகள் கூடு கட்டும் ஆலமரமாக,
பனித் துளிகள் உறங்கும் புல்வெளியாக,
வண்டுகள் ரீங்காரமிடும் மலராக,
தாகம் தீர்க்கும் கார்மேகமாக,
அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற ஏழேழு பிறவி வேண்டும் போலவே...!!!
மாற்றிவிடு இறைவா என்னை பூமிக்கு உப்பாக.
- deeya's quotes