குழந்தைகளாக மாறுவோமே:-
மரக் கிளைகளில் இருக்கும் மழைத் துளிகளை உலுக்கி நனைந்து குழந்தைகளாக மாறுவோமே,
தென்றல் வீசும் எதிர் திசையில் நின்று இருகரங்கள் விரித்து சுற்றி சுற்றி விளையாடி குழந்தைகளாக மாறுவோமே,
பட்டு போல் படர்ந்து இருக்கும் புல் வெளியில் படுத்து உருண்டு குழந்தைகளாக மாறுவோமே,
புள்ளினத்தின் குரல் கேட்டு அவைகளைப் போல் உடல் பாவனை செய்து குழந்தைகளாக மாறுவோமே,
கள்ளம் இல்லாமல் பிறரை பார்த்து புன்னகித்து மகிழ்ச்சி கொடுத்து குழந்தைகளாக மாறுவோமே,
கத்து மறந்து வெளிப்படையாக செயல்பட்டு குற்றம் பாராமல் குழந்தைகளாக மாறுவோமே,
கபடு களைந்து, தோள் கொடுத்து மற்றவரின் வெற்றியை கொண்டாடி குழந்தைகளாக மாறுவோமே,
எளிமையாக பேசி பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக வாழப் பழகி குழந்தைகளாக மாறுவோமே.
- deeya's quotes