நன்மையில் சிறந்தது...
நன்மை என்றால் நன்று என்பார் ஆசிரியர்,
நன்மை என்றால் இலாபம் என்பான் வியாபாரி,
நன்மை என்றால் பயன் என்பார் மருத்துவர்,
நன்மை என்றால் நல்விளைவு என்பார் விவசாயி,
நன்மை என்றால் சுபகாரியம் என்பார் புரோகிதர்,
நன்மை என்றால் நல்வினை என்பார்கள் மூத்தவர்கள்,
நன்மை என்றால் உபகாரம் என்பான் கொடையாளி,
நன்மை என்றால் ஆசி என்பான் பக்தன்,
நன்மை என்றால் பிரவி பலன் என்பார் முதியவர்,
நன்மை என்றால் திருவிருந்து என்பார் கிறித்துவர்,
நன்மை என்றால் நற்குணம் என்று அழைக்கும் சமூகம்,
நன்மைக்கு உண்டு பல பரிமாணங்கள்...
நன்மையில் சிறந்த நன்மை எதுவெனில்;
நன்மை செய்பவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பதே.
- deeya's quotes