இது ஒரு உண்மை சம்பவம்.🌿🙏🌿..
நான் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருந்தேன்.
மிகவும் நெருக்கடியான சாலை, அதிவிரைவு வாகனங்கள் பயணிக்கும் சாலை.
24 மணிநேரமும் நெருக்கடியாகவே இருக்கக்கூடிய சாலை அது.
மழை கொட்டித் தீர்த்து கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறிமாறி அடித்துக்கொண்டே இருந்தது.
இதனால் மக்கள் குடை இருந்தாலும் கூட, இடிமின்னலுக்கு பயந்தும், கொட்டும் பேய்மழைக்கு பயந்தும் கடைகளின் கூரைகளின் கீழ் ஒதுங்கி நின்று கொண்டு இருந்தார்கள்.
சாலையில் யாரும் நடமாட முடியாத அளவுக்கு மழை.🌿
நானும் ஒதுங்கி நின்று கொண்டு இருந்தேன். கையில் குடை இல்லாததால்.
அப்போது எனது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெயர் தெரியாத நண்பர் திடீரென கூரையின் கீழிருந்து சாலையை நோக்கி ஓடினார்.
இவர் ஏன் இப்படி இந்த மழையில் ஓடுகிறார் என அனைவரும் திட்டினார்கள்.
நானும் மனதுக்குள் அவ்வாறு தான் நினைத்தேன்.
ஆனால் அவரோ ஓடி சென்று அந்த சாலையின் ஒரு ஓரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த ஒரு நபரை தட்டியெழுப்பி அரவணைத்து கடைகளின் கூரைகளுக்கு அருகே கூட்டி வந்தார் குடை பிடித்தபடி.
கடையின் கூரைக்கு கீழ் கூட்டிக்கொண்டு வந்ததும், அருகிலிருந்த கடைக்கு ஓடி ஒரு தேநீரும், வடையும் வாங்கி கொடுத்தார்.
அதோடு நிறுத்தாமல் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய துணிக்கடையில் ஒரு துண்டு ஒன்றை வாங்கி அவரை துடைத்தும் விட்டார்.
இந்த உதவியை பெற்று கொண்ட அந்த நபரும், சுற்றியிருந்த அனைவரும் அந்த நண்பரை பாராட்டினார்கள்.
அதற்கு பிறகு ஒவ்வொரு நபராக தங்களால் இயன்ற ஒரு பண உதவியை செய்தார்கள்.
இப்போது விசயத்துக்கு வருகிறேன்,
நீங்கள் மிகவும் சக்திவாய்ந்த கடவுளாக எந்த கடவுளை கருதுகிறீர்கள்? உங்கள் அனுபவத்தை கொண்டு இதற்கு பதில் கூறுவீர்களா?🍒
அந்த பெயர் தெரியாத நண்பர் இருக்கிறார் அல்லவா, அவர்தான் சக்திவாய்ந்த கடவுளாக தெரிந்தார்.
காரணம் அவர் ஆரம்பித்து வைத்த ஒரு உதவி பலரையும் தட்டியெழுப்பி அந்த இடத்தில் இருந்த அனைவரையும் உதவி செய்ய வைத்து, அங்கிருந்த அத்தனை மனிதர்களையும் ஒரே நொடியில் கடவுளாக மாற்றிகாட்டி விட்டார்.
ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன், எல்லோருக்குள்ளும் உதவி செய்ய வேண்டும் என்கிற நல்ல எண்ணம் இருக்கும், ஆனால் ஒரு சில நட்பு மற்றும் உறவுகளின் துரோகத்தால் இனிமேல் யாருக்கும் உதவியே செய்யக்கூடாது என்கிற எண்ணமாக மாறி போயிருக்கும்.
எல்லோரும் அவ்வாறு இல்லை,.... 💐
இந்த உலகில் உதவி தேவைப்படுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அவர்கள் உங்களிடம் ஒரு உதவியை கேட்க முன்வருகிறார்கள் என்றாலே என்ன அர்த்தம், அவர்கள் உங்களை ஏதோ ஒரு வகையில் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை உடைக்காதீர்கள்.
உதவி செய்பவர்தான் சக்தி வாய்ந்த கடவுள்.
இது உண்மையா இல்லையா?
எதற்காக கோவில், ஆலயம், மசூதிக்கு போகிறோம்??...... 🙏
உதவி வேண்டி தானே?
அப்படியானால் நீங்கள் அங்கு சென்று ஒருவரை நம்பி உதவி கேட்கிறீர்கள், அவர்கள் கடவுள் என்கிறீர்கள்.
அப்படியானால் உங்களை நம்பி உங்களிடம் உதவி கேட்கும் நபருக்கு நீங்கள் தானே கடவுள்?
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
உதவுங்கள்..... 🌹🙏🌹...
இதையும் படித்துவிட்டு கடந்து செல்லாதீர்கள்,.... 🙏
இனி உதவி செய்யும் மனப்பக்குவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், அதுதான் எனது வெற்றியே..... 👍
ஏழைகளுக்கு மனம் இரங்குகிறவன்
இறைவனுக்கு கடன் கொடுக்கிறான்..
#பரிசுத்த_வேதாகமம்.... 🌿🙏🌿....
நாம் செய்யும் சிறு தருமம்கூட ஒரு நாளில் நமக்கு இரட்டைத்தணையாக
நமக்கு வந்து சேரும் என்பது நிதர்சனமான உண்மை 🙏..
பிறருக்கு உதவி செய்வது குறித்து..
#இந்து சமய நூல்கள் வலியுறுத்து கின்றது...
நீ உணவு உண்ணும்பொழுது....
உன் அண்டை வீட்டாரையும் விசாரி
என்று #திருக்குர்ஆன் போத்திக்கின்றது..
தர்மம் தலை காக்கும் 🌿🙏🌿...