மறந்து விடுங்கள் தவறில்லை
கைவிடப்பட்ட காதல்கள்,
தோற்றுப்போன முயற்சிகள்,
முறியடிக்கப்பட்ட திட்டங்கள்,
அவமானப்படுத்திய சறுக்கல்கள்,
ஏமாற்றிவிட்ட உறவுகள்,
எல்லாமே வாழ்க்கைப் பயணத்தின் உடன் பிரயாணிகள்,
ஏற்படுத்தி விடுகின்றன நம் இதயத்தில் சுவடுகள்,
மாறிவிடுகின்றன நம் நெஞ்சின் நீங்கா நினைவுகள்,
நினைவுகள் நிரம்ப நிரம்ப மந்தமாகின்றது நம் செயல்பாடுகள்,
செயல்பாடுகள் மந்தமாகக் குறைகிறது நம் வெற்றிகள்,
வெற்றிக்கு என்னதான் தீர்வுகள் ஒரே மருந்து அனைத்திற்கும் ஔஷதம் மறந்துவிடுங்கள்,
வாழ்க்கையின் வெற்றிக் கனிகளை சேகரித்துக்கொண்டே முன்னேறுங்கள்.
- deeya's quotes