14
International Day of Action for Rivers/ Pi Day
I decided I can't pay a person to rewind time, so I may as well get over it.
- Serena Williams
*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு*
*நாள்: 14-03-2023*
*கிழமை: செவ்வாய்க்கிழமை*
_______
கல்வி பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள்
*திருக்குறள்*
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பொறை உடைமை
குறள் : 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
பொருள்:
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்
*பழமொழி :*
Fortune favors the brave
வீரனை அதிர்ஷ்டம் விரும்பிச் சேர்ந்திடும்.
*இரண்டொழுக்கப் பண்புகள் :*
1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம்.
2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்
*பொன்மொழி :*
எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்
*பொது அறிவு :*
1. காப்பியை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?
பிரேசில்.
2. வடகிழக்குப் பருவக்காற்று வீசும் மாதங்கள் எவை ?
அக்டோபர் - டிசம்பர்.
*English words & meanings :*
glazing – glass work in the frames especially windows. noun and verb. All this old church windows are renovated with glzing. சட்டத்தில் கண்ணாடி பொருத்துதல். பெயர்ச் சொல், வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி தண்ணீர் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளது. இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இதனை உட்கொள்வது சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.
*மார்ச் 14*
*கார்ல் மார்க்சு அவர்களின் நினைவுநாள்*
கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.
கார்ல் மார்க்ஸ் பற்றிய மேலதிகத் தகவல்களை இதன் தொடர்ச்சியாக வருகின்ற *வரலாற்றில் இன்று* தலைப்பிலும் *வானம் வசப்படுமே* என்ற தலைப்பிலும் ஒலிப் பேழையைக் கேட்டு மகிழுங்கள்.
-----------------------------------------------------------
*ஐரோம் சானு சர்மிளா அவர்களின் பிறந்தநாள்*
ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வந்தது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.
ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார்.