*மகளீர்தின வாழ்த்துகள்...*
🌹🌺💐💐
அன்பின் உயிராய்
ஆற்றலின் உருவாய்
இனிமையின் சிறப்பாய்
ஈர்த்திடும்
செயலாய்
உண்மையின் உறுதியாய்
ஊக்கத்தின் நிலைப்பாய்
எண்ணத்தில் உயர்வாய்
ஏற்றத்தில் விரிவாய்
ஐயமற்ற அறிவாய்
ஒற்றுமையே பலமாய்
ஓங்கு புகழாய்
*ஔடதமாய் உலகு வாழ நீ வாழ்க பெண்ணே*...
*இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்*🙏🌹🙏🌹🙏
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
*பெண்மையை போற்றுவோம்*.
*உலக மகளிர் தினம்*.
*இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்*..
வலிகளையும் கடந்து
தன்னம்பிக்கையோடு
வரும் புன்னகையை
விட.....
பேரழகு ஏதுமில்லை....!!!!!
அழகு என்பது ரசிக்கவே....
அன்பு மட்டும் போதும்
அழகாய் வாழ்ந்திட....!!!!!
தூக்கியெறிந்த பிறகும்
தூற்ற மனம் வருவதில்லை
எனில்.....
உங்களின் அன்பு உண்மையானது தான்....!!!!
நாம் ஆனந்தமாக இருந்தால்
அனைவருக்கும் தெரியும்....
ஆனால்....
நாம் சோகமாக இருந்தால்
அது நம் நண்பனுக்கு
மட்டுமே தான் புரியும்....!!!!!
நாளுக்கு நாள் நமக்கானது
எதுவோ....
அதுவே நம் வாழ்வின்
நோக்கத்தைக் கண்டு
பிடிக்கும்.....!!!!!
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
*நாளும் ஒரு சிந்தனை*
சாதனைகளோடு
சரித்திரம் படைக்க
கடவுளால்
படைக்கப்பட்ட
கற்பகவிருட்சம் தான்
பெண்கள்!!
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
முதல் நாள் வாங்கிய கீரையை மறுநாள் பயன்படுத்தும்போது கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால் பசுமையாக இருக்கும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
அறிவின் தாயகமாய், அருள்நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்.
*-ஜெயகாந்தன்*
📆 *இன்று மார்ச் 8-*
▪️ *அனைத்துலக பெண்கள் நாள்.*
▪️ *1911-இல் அனைத்துலக பெண்கள் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? மார்ச் 8-ன் போராட்ட வரலாறு!*
பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது.
18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே சரிவருவார்கள் என்று முடக்கிவைக்கப்பட்டார்கள். இந்த நிலை மெல்ல மாறி, 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணியில் கால்பதித்தாலும் அவர்களுக்கான ஊதியத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த பெண்கள் 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தங்கள் உரிமைகளுக்காக பெண்கள் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். அந்த மாநாட்டில் கலந்து கொண்டர்களின் முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின்.
பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கிளாரா, பெண்களின் உரிமைகளை பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கருதினார். அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தினத்தில் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தன.
அதற்கு பின் உலகை திரும்பிப்பார்க்க வைத்த புரட்சி என்றால், 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி. இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது என்பது வரலாறு. இதனையடுத்து 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார்.
ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில் புரட்சி நடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். *க்ரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. அதனை அடுத்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.*
பெண்ணின்றி
அமையாது உலகு.
பெண்கள்
வீட்டின் கண்கள்,
பெண்கள்
நாட்டின் கண்கள்.
ராணி சாய்ந்துவிட்டால்
ராஜாவுக்கு மதிப்பில்லை,
சதுரங்கமாக இருந்தாலும்...
குடும்பமாக இருந்தாலும்.
படிக்கத் தெரியாத ஆணிடம்
கிடைக்கக் கூடாத புத்தகம்
"பெண்"
கழுத்தில்
தாலி ஏறும்வரை..
யாரென்று
தெரியாத ஒருவனுடன்...
வாழ்க்கைப்
பயணத்தைத் தொடங்கும்...
பெண்களைவிடவா
தன்னம்பிக்கைக்கு
நல்ல உதாரணம்
இருக்கப் போகிறது..!
*மகளிர் தின வாழ்த்துகள்.*
💐💐💐💐💐💐💐