*அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட....!*
*பிடித்தவர்கள் தான் அழகாய் தெரிகிறார்கள் என்பதே உண்மை..!*
🙏🙏🙏
*இன்றைய குட்டிக்கதை*
*"மயக்கமா கலக்கமா "*
உகீதா பொழுது விடிந்ததுமே
ஆரம்பித்து விட்டாள். இரவு நெடு நேரம்
நச்சரித்ததின் மிச்ச மீதியை இப்போது
பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்தாள்.
" ஒண்ணு உங்கம்மா இருக்கணும்
இல்லாட்டா நான் இருக்கணும்.
நீங்களே முடிவு பண்ணிகுங்கோ"
ணங் கென்று டிபன் தட்டுமேசைமேல்
வந்து விழுந்தது. ராகவன் தோசை விள்ளலோடு வார்த்தைகளையும்
விழுங்கினான். என்ன பதில் சொல்ல?
போன மாதம் வரை அம்மா லட்சுமி
வெளியில் நாலு வீடுகளில் சமையல்
செய்து தன்னால் முடிந்த அளவு எதோ
கொண்டு வந்து கொடுத்தவள்தான். வேலைக்கு போன இடத்தில் வழுக்கி
விழ டாக்டர் எக்ஸ்ரே மருந்து மாத்திரை என்று எக்கச்சக்க செலவாகி
விட்டது. ஏற்னவே நிலையான வேலை
இல்லாமல் இழுபறியான நிலை
ராகவனுக்கு. இதில் லட்சுமியின் மருத்துவ செலவு, கால் சரியாகி மீண்டும் வேலைக்கு போக முடியுமோ
முடியாதோ தெரியாது.
இதை நினைத்தே எரிச்சலடைந்தாள்
கீதா. சும்மா உட்கார வைத்து ஒரு ஜீவனுக்கு படியளக்க முடியுமா.
முதியோர் இல்லம் கட்டணமில்லாமல்
இருந்தால் லட்சுமியை அனுப்பிவிட வேண்டும் என்ற தீர்மானத்தை
ராகவனிடம் நேற்று முதல் ஓதிக்
கொண்டு இருக்கிறாள்.
லட்சுமி
குச்சி ஊன்றியபடி காலை விந்தி விந்தி நடந்து பக்கத்து பிள்ளையார் கோவிலுக்கு போயிருக்கிறாள்.
வந்த பிறகு இந்த முடிவை சொல்ல
வேண்டும்.
லட்சுமி வாசலில் யாருடனோ பேசியபடி வருகிற சத்தம் கேட்டது.
எரிச்சலுடன் திரும்பிய கீதா திகைத்தாள். அம்மாவா?
கீதாவின் அம்மா மங்களம் கீதாவை
பார்த்ததும் மடை திறந்த வெள்ளம்
போல கொட்டினாள்.சீசன் ஒத்து கொள்ளாமல் ஒரு வாரமாக இருமலாம். இதான் சாக்கு என்று
மருமகள் பெண் வீட்டுக்கு போ என்று
விரட்டி விட்டாளாம் எதாவது தொத்து
வியாதியா இருந்து குழந்தைக்கும்
வந்துட்டா பிரச்சனைன்னு சொல்லி போக சொல்லிட்டாளாம். மங்களம்
அழுதாள். கீதா ராகவனை பார்க்க
முடியாமல் சங்கடத்தில் தவித்தாள்.
லட்சுமி ஆதரவுடன் மங்களத்தின்
கைகளை பற்றினாள்.
" கவலை படாதீங்கோ மாமி.நமக்கான பாதையை பகவான் நிச்சயமா காட்டுவார்.இப்போ கோவில்லே
ஒரு மாமியை பார்த்தேன். இனிமே
வீடு வீடா போய் வேலை செய்ய
முடியாதுன்னு வருத்த பட்டேன்.
அந்த மாமி சொன்னா நாலஞ்சு பேரா சேர்ந்து ஊறுகாய் பொடி வகைகள் அப்பளம் வடாம் போடற பிஸினஸ் ஆரம்பிக்க போறாளாம். அதோட
காலை டிபன் மத்தியான லஞ்ச் இரவு டிபனும் தயார் பண்ணி டெலிவரி பண்ணற ஐடியாவும் இருக்காம்.
நான் உடனேயே வரேன்னு ஒத்திண்டேன். அப்போதான் இந்த மாமியும் வந்தா. நானும் வரேன்னு
சொன்னா.
பெரிய வீடா வாடகைக்கு தங்கற
மாதிரி எடுத்திருக்காளாம். நானும்
உங்க அம்மாவும் நாளைக்கே அங்கே
போயிடறோம். பாவம் இந்த சின்ன போர்ஷன்லே எங்களையும் தங்க
வைச்சா உனக்குதான் கஷ்டம் "
ராகவன் அவசரமாக கேட்டான்
" டெலிவரி பண்ணற வேலையை
நானே செய்யறேன் அம்மா" என்றான்.
கீதா மெல்ல முனகினாள்
" என்னாலே முடிஞ்ச அளவு நானும்
வந்து செய்யறேன். என்னையும்
சேர்த்துக்க சொல்லுங்கோ"
"அப்பறம் என்னம்மா ? வருங்காலத்தில் நாமே சொந்தமா
மெஸ் ஆரம்பிச்சுடலாம்"
அதுவரை மயக்கமா கலக்கமா என்று
தடுமாறிக்கொண்டிருந்த அவன்
மனம் உற்சாகத்தில் துள்ளியது.