*காதலர் தினம் இன்று* காதலிக்கும் இதயங்களின் திருநாள் காதலர்கள் கொண்டாடும் பெருநாள்
கண்ணசைவில் அரும்பிடும் காதல் கை அசைவால் தொடர்ந்திடும் காதல் விரும்பியே பேசி விரிந்திடும் காதல் இதயங்களை இணைத்திடும் காதல்
சாதிமதத்தை மறக்கடிக்கும் காதல் உணர்வால் உருவாகுவதே காதல் இனம் மொழியை இணைத்திடும் காதல் தகுதியெனும் தடைகளை மீறும் காதல்
தள்ளாடும் தாமரைகள் தரையினிலே விழுந்து தவித்திடுமே தாபத்தீயினிலே தொட்டிடும் இதயங்கள் தொடர்ந்திடும் சொந்தமாகும் காதலெனும் பந்தத்தால்
காதலெனும் கட்டுமரங்கள் கடலினிலே கவிழ்ந்தாலும் எழுந்திடுமே ஊடலிலே கரைசேரும் எதிர்நீச்சலால் பல காதல் கடல்நீரில் மூழ்கிடுமே சில காதல்
காதல் திருமணங்களே இனி வருங்காலம் கற்காலம் ஆகிடுமே இக்கால முறைகளும் பெற்றவர்க்கு வேலையில்லை இனிமேலும் பெண்பார்க்கும் படலமில்லை இனியேதும்
காதலிக்கும் உள்ளங்களே முடிவெடுங்கள் காதல் வயப்ப்படுமுன் சிறிது சிந்தியுங்கள் கண்ணாக வளர்த்தோரை நினைத்திடுங்கள் காதலிக்கும் தகவலை சொல்லி விடுங்கள்
காலமும் மகிழ்ந்திட ஞாலத்தில் வாழ்ந்திட காதலர் தினம் நீங்கள் கொண்டாடுங்கள்
*இனிய காதலர் தினம் நல் வாழ்த்துக்கள்.*✍️ *அன்புடன்*❤️🌹💐 |