பென்சில் பின்னாடி இருக்கிற ரப்பர் போல தான் பல பிரச்சனைகளுக்கு தீர்வு அதிலயே அடங்கி இருக்கிறது. நாம் தான் அதை விட்டு விட்டு எல்லா இடத்திலும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
யாரையும் அற்பமாக நினைக்காதீர்கள். சிறு தீக்குச்சியின் வலிமை தான் பெரும் இருட்டையே கிழித்திருக்கின்றது.
விட்டுக் கொடுத்து போகின்ற மனம் இருந்தால் விட்டு விட்டு போகின்ற எண்ணம் எவருக்கும் எழாது.
உங்களுடைய முதல் வெற்றி எதுவென்றால் உங்களை நீங்கள் ரசிப்பது. உங்களை நீங்களே மதிப்பது. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்வது.
புதைக்கப் படவில்லை விதைக்கப் படுகிறோம் என்று உணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது. ஒதுக்கப் படவில்லை செதுக்கப் படுகிறோம் என்று உணர்ந்த மனம் தோல்விக்கு அஞ்சாது.
“முடியாது “ என்று நீ சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.
இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே…!
சமாளிக்க தெரியாதவர்களும், மன்னிக்க முடியாதவர்களும் பிரச்சனையை பெரிதாக்கி விடுகிறார்கள்.
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும். அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.
நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை விட என்ன இல்லை என்று ஆராய்ந்து கேலி பேசுவதில் தான் இந்த உலகம் அதிக அக்கறை கொள்கிறது.
நம் சிந்தனைகளை செயலாக்கி முடிக்க இன்றே நல்ல நாள் என்று நினையுங்கள்.
போதிக்கும் போது கற்றுக் கொள்ளாத பாடத்தை பாதிக்கும் போது தான் கற்றுக் கொள்கிறோம்.
மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. ஆனால், மனம் விட்டு பேசத் தான் யாருக்கும் மனம் வருவதில்லை.
இரவுக்குப் பின் பகலை தருகின்ற இறைவன் குளிருக்கு பின் வெயிலைத் தருகின்ற இறைவன் நிச்சயம் ஒவ்வொரு துன்பதுக்கு பின் இன்பத்தையும் தருவான் என்று நம்புங்கள்.
கற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் நீங்கள் முட்டாள்களிடம் இருந்து கூட பாடம் கற்க முடியும். அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் ஒருத்தரிடம் இருந்தும் எதையும் கற்க முடியாது.
நாம் சிந்திக்கும் எண்ணங்கள் நல்லதாய் இருந்தால் வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலை நன்கு அமையும்.
இறைவன் நமக்கு செல்வத்தை கொடுக்கவில்லையே என்று கவலைப் படாதீர்கள். நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். அதைக் கொண்டு எதையும் சாதிக்கலாம். சில மோசமான நாட்களை போராடி கடந்தால் தான் பல சிறந்த நாட்களை காண முடியும்.
யார் நமக்கு என்ன செய்தார்கள் என்று நினைப்பதை விட நம்மால் யாருக்கு என்ன செய்ய முடியும் என்று நினையுங்கள்.
குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
உங்களின் திறமையை பலர் கர்வமாக கூட நினைக்கலாம். மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையைத் தானே தவிர உங்கள் திறமையை அல்ல.
இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று வருந்தாதீர்கள். நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும், நீங்கள் முயற்சி செய்தால்.
வியந்து பார்க்கிறேன்
வியந்து பார்க்கிறேன்! பறக்கும் வானூர்தியை,
வியந்து பார்க்கிறேன்! வானளாவிய கட்டிடங்களை,
வியந்து பார்க்கிறேன்! கடலுக்குள் நீந்தும் நீர்மூழ்கிகப்பலை,
வியந்து பார்க்கிறேன்! அணுவைத் துளைத்தெடுக்கும் ஆற்றலை,
வியந்து பார்க்கிறேன்! இவை அனைத்தையும் உருவாக்கின மனிதனை;
வியந்து பார்த்தபின் நடந்துசென்றேன் நாடு காடு வழியில்...
வியந்து பார்த்தேன்! சிறகடிக்கும் பட்சிகளை,
வியந்து பார்த்தேன்! மேகங்களை முத்தமிடும் மலைகளை,
வியந்து பார்த்தேன் துள்ளிக் குதிக்கும் மீன்களை,
வியந்து பார்த்தேன்! ஒற்றை அணுவில் இருந்து பிறந்த மழலையை,
வியந்து பார்த்தேன்! மனிதனைப் படைத்த இறைவனை,
வியத்தகு செயல்களைச் செய்யவும் உருவாக்கவும் இயன்றவன் இறைவனே.
- deeya's quotes