மன்னிப்பீர்களா?
மாறிக் கொண்டே இருப்பது காலம்,
எப்போதும் வெற்றியைக் கொடுப்பதல்ல காலம், கண்ணீரை இடம் மாற்றிக் கொண்டே இருக்கும் காலம்.
நிராகரிப்பு எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தின் முடிவு, மனதின் காயங்கள் கோபத்தின் முடிவு, கண்ணீர் துரோகத்தின் முடிவு.
வாழ்க்கையின் நிலைகள் நிரந்தமற்றது,
நிலவும் சூழ்நிலைகள் நிரந்தரமற்றது,
கண்களின் கண்ணீர் நிரந்தரமற்றது.
சுற்றம் காக்க மன்னிப்பீர்களா?
காயங்கள் ஆற்ற மன்னிப்பீர்களா?
கண்ணீர் துடைக்க மன்னிப்பீர்களா?
- deeya's quotes