இதையே புனிதமென்பேன்
இல்லத்திலும், சுற்றுச்சூழலிலும் கடைப்பிடிப்பதை தூய்மையென்போன்,
தேவ ஆலயத்தில் உணர்வது தெய்வீகமென்பேன்,
வாழ்க்கையில், செய்கைகளில் இருக்க வேண்டியது பரிசுத்தமென்பேன்,
மனிதகுலத்திற்கு வழிகாட்டியாய் வாழ்வதையே புனிதமென்பேன்,
சக மனிதர்களை தன்னைப் போல் நேசிப்பதையே புனிதமென்பேன்,
எல்லா உயிரினங்களையும் ஆதரித்து அரவணைப்பதையே புனிதமென்பேன்,
கடவுளின் தோழர்களாக எல்லோருக்கும் தோள் கொடுப்பதையே புனிதமென்பேன்,
கொடையுள்ளத்துடன் தன்னலம் இல்லாமல் வாழ்வதையே புனிதமென்பேன்...
- deeya's quotes