பெண் குழந்தை
இல்லாத வீடு.
ஓர் பொட்டல் காடு..
பெண் குழந்தை
இருக்கும் வீடு
அது பசுமை நிறைந்த
நந்தவனம்...
தாய்க்கும் தந்தைக்கும்
நேசம் இனைப்பவள்
தாயோடும் தந்தையோடும்
பாசம் மிகுந்தவள்
முரட்டுத்தனமான
மனிதைக்கூட
மென்மையாக
மாற்றுபவள்
முள்ளையும்
மலர வைப்பவள்
பெண் குழந்தை
உள்ள வீடு .
ஓர் சிறு கோவில்...
*ஜன 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்*
“மெய்யாகும் என் கனவு”
விடியும்வரை உறக்கத்தில் ஒரு கனவு,
வாழ்க்கையை நினைத்து அடிக்கடி கனவு,
லட்சியம் பற்றி இரவு பகலாகக் கனவு,
கனவுகள் கனவுகளாகவே கலைந்து விடக்கூடாது,
கனவுகளை நினைவாக்க இலட்சியத்தை மறந்துவிடக்கூடாது,
கனவுகள் மெய்ப்பட உழைப்பை கைவிடக்கூடாது.
மேகங்கள்போல் பறந்துவிடக்கூடாது கனவு,
புகையைப்போல் மறைந்துவிடக்கூடாது கனவு,
நீர்மேல் எழுதும் எழுத்துப்போல் ஓடிவிடக்கூடாது கனவு.
கனவுகள் அல்ல வாழ்க்கை என்று நம்பிவிடக்கூடாது,
கனவு காண்பது தவறு என்ற யோசனை கூடாது,
மெய்யாகும் என் கனவு என்ற உறுதியை விட்டுவிடக்கூடாது.
- deeya's quotes