இரவின் இருள் விடியும் வரை,
அறையின் இருள் விளக்கு ஏற்றும் வரை,
கருவறையின் இருள் பிறப்பு வரை,
பார்வையற்றவரின் இருள் கண் தானம் பெறும் வரை,
சேயின் இருள் தாயை காணும் வரை,
வறுமையின் இருள் பொருள் பெறும் வரை,
கல்லாதவரின் இருள் கல்விக்கண் திறக்கும் வரை,
மரணத்தின் இருள் உயிர் பிரியும் வரை,
பட்சிக்கும் இருளை விழுங்க ஒளி வர காத்திருக்கும் வரை;...
தீப்பந்தமாய் நாம் மாறும் வரை...
ஒழியாது இருள்...
தீயாய் எழும்பி ஒளியாய் வீசி விழுங்குவோம் இருளை.
- deeya's quotes