*🤔உங்களுக்குத் தெரியுமா?*
1. நிலா பூக்கள் இரவில் மட்டும் பூக்கும், பகலில் மூடிக்கொள்ளும்.
2. கருங்கற்றாழை எந்த பூவையும் வளர்க்காமல் பல வருடங்கள் செலவழிக்கிறது, அது ஒரு பூ பூத்தபின் இறந்துவிடும்.
3. உலகில் மிகப்பெரிய மலரான டைட்டன் அரம் 10 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டது.
4. ரோஜாவின் ஒரு சில இனத்தின் விதைகளில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.
5. தாமரை பழங்கால எகிப்தியரால் புனிதமான மலர் என்று கருதப்பட்டது, மேலும் இது இறந்தவர்களை புதைக்கும் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது.
6. சில வகை மூங்கில் செடிகள் 65 அல்லது 120 ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கும்.
7. ஹாலந்தில் 1600-களில் ட்யூலிப் குமிழ்கள் தங்கத்தை விட அதிக மதிப்புமிக்கவை.
8. மிகவும் விலையுயர்ந்த நறுமணப்பொருளான குங்குமப்பூஇ ஒரு வகை குரோக்கஸ் மலர் இருந்து கிடைக்கிறது.
9. அமெரிக்காவில் கிடைக்கும் புதிய வெட்டு மலர்களில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் மலர்கள் கலிபோர்னியாவில் இருந்து கிடைக்கின்றன.
10. சூரியகாந்திப்பூ ஆறு மாதங்களில் 8 முதல் 10 அடி உயரம் வளரும்.